This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your parenting journey

தாய்ப்பால் கொடுக்கும் போது தாய் என்ன உணவுகளை உண்ண வேண்டும்

Breastfeeding & Lactation
Written by - Chandrika Iyerகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 19, 2026
தாய்ப்பால் கொடுக்கும் போது தாய் என்ன உணவுகளை உண்ண வேண்டும்
Likes44 Likes|
Read time5 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • தாய்ப்பால் தான் பச்சிளம் குழந்தைக்கு 6 மாதங்கள் வரை ஊட்டச்சத்து கிடைப்பதற்கான ஒரே ஆதாரம், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து குழந்தையை ஆரோக்கியமாக வைக்கிறது.
  • பாலூட்டும் தாய்மார்கள் மீன், புரத உணவுகள், பழங்கள், காய்கறிகள், நட்ஸ் மற்றும் விதைகள் ஆகியவற்றை சீரான டயட்டில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பால் சுரப்பை அதிகரிக்க பார்லே, ஓட்ஸ், வெந்தய விதைகள், பூண்டு மற்றும் பச்சை சிவப்பு காய்கறிகள் மிகவும் உதவியாக இருக்கும், மது மற்றும் காஃபியை தவிர்க்க வேண்டும்.
  • தாய்ப்பால் சுரப்பை இயற்கையாக எப்படி அதிகரிக்கலாம்? Explore our MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes).
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)
Rating4.3
Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2
Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2
Rating4.8

ஆண் குழந்தையாக இருந்தாலும் அல்லது பெண் குழந்தையாக இருந்தாலும், பச்சிளம் குழந்தைக்கு பிறந்ததில் இருந்து 6 மாதங்கள் வரையிலும் ஊட்டச்சத்துகள் கிடைப்பதற்கான ஒரே ஆதாரம் தாய்ப்பால் மட்டுமே. குழந்தைக்கு ஊட்டச்சத்து அளிக்க மிகச் சிறப்பான வழிமுறை இதுதான். தாய்ப்பால் பாதுகாப்பானது மற்றும் சுத்தமானது. ஆஸ்துமா, உடல் பருமன், நீரிழிவு போன்ற நீண்டகால மற்றும் குறுகிய கால நோய்களில் இருந்து பச்சிளம் குழந்தைகளுக்கு இது பாதுகாப்பு தருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த தாய்ப்பால் குழந்தைகளை நோய்களிடம் இருந்து பாதுகாக்கிறது. சுருக்கமாக சொல்லப்போனால் தாய்ப்பால் தான் குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

இப்போது கேள்வி என்னவென்றால், பாலூட்டும் காலங்களில் தாய்மார்கள் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதே. அதற்கான பதிலை இந்தக் கட்டுரையில் நாங்கள் தந்திருக்கிறோம். நீங்கள் பாலூட்டும் தாய்மாராக இருப்பின், டயட்டில் நீங்கள் பின்பற்ற வேண்டிய உணவுகள் குறித்த பட்டியலை கீழே குறிப்பிட்டுள்ளோம்.

  • மீன் மற்றும் கடல் உணவு

பாலூட்டும் சமயத்தில் ஊட்டச்சத்துகள் மிகுந்த கடல் உணவுகள் எடுத்துக் கொள்வது மிக முக்கியமானதாகும். மீன்களில் புரதம் மிகுதியாக உள்ளது. அதில் சேச்சுரேடட் கொழுப்பு குறைவாக இருக்கும். மேலும், இவற்றில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. கடல் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துகள் நமது இதயத்தை பாதுகாத்து, பலமானதாக வைத்திருக்க உதவுகிறது.

  • புரதம் நிறைந்த உணவு:

பாலூட்டும் தாய்மார்கள் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் இரண்டு அல்லது 3 கப் அளவுக்கு புரதம் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில், இறைச்சி மற்றும் பால் சம்மந்தமான பொருட்களில் புரதம் மிகுதியாக உள்ளது.

  • பழங்கள் மற்றும் காய்கறிகள்:

இவற்றில் ஆண்டிஆக்சிடண்ட்ஸ் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன. ஒருவருக்கு போதுமான நீர்ச்சத்து கிடைக்க உதவுகிறது. ஆக, சீரான டயட் திட்டத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  • நட்ஸ் மற்றும் விதைகள்

இவை மிகுதியான புரதம் மற்றும் அத்தியாவசிய மினரல்களான இரும்புச்சத்து, ஜிங்க், கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை கிடைப்பதற்கான ஆதாரங்களாக உள்ளன.

பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்தான உணவு எது என்பதை நாம் பார்த்தோம். இப்போது தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்க வேண்டும் என்றால் டயட்டில் என்ன சேர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

  • பார்லே மற்றும் பார்லே மால்ட்

ஆம்! கின்னசில் இடம்பெற்ற இந்த உயரமான புல்கள் தான் தாய்ப்பால் சுரப்பை பெருக்குவதற்கான வழிமுறையாகும். பெடா-குளூகன் என்னும் சத்து பார்லேவில் மிகுதியாக உள்ளது. இந்த பெடா-குளூகன் பொருளில் பாலிசாக்கரைடுகள் நிறைந்துள்ளன. இது ப்ரோலாக்டின் என்னும் பொருளை அதிகரிக்கும். இந்த ப்ரோலாக்டின் தான் பால் சுரப்பை தூண்டக் கூடிய ஒரு ஹார்மோன் ஆகும்.

பார்லே தானியங்களில் இருந்து பார்லே மால்ட் தயாரிக்கப்படுகிறது. பார்லே முளைவிடும்போது அது ஸ்வீட் சிரப் போல மாறுகிறது. இதனை மேபிள் சிரப்புக்கு பதிலாக பயன்படுத்தலாம்.

  • வெந்தய விதைகள்:

வெந்தய தாவரங்களில் இருந்து இந்த விதைகள் சேகரிக்கப்படுகின்றன. தாய்ப்பால் சுரப்பை பெருக்குவதற்கு இது பயன்படுகிறது. இதில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன் என்னும் பொருள் பால் சுரப்பை தூண்டுகிறது. கிழக்கு ஆசியா மற்றும் இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் பால் சுரப்பை பெருக்குவதற்கு மிக அதிகமாக வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது.

  • பச்சை மற்றும் சிவப்பு காய்கறிகள்:

தாய்ப்பாலை சுரப்பை பெருக்குவதற்கான டயட் பட்டியலில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில் விட்டமின்கள், மினரல்கள் மற்றும் என்சைம்கள் மிகுதியாக உள்ளன. நீங்கள் இவற்றை பச்சையாக சாலட் போன்று எடுத்துக் கொள்ளலாம் அல்லது கசப்பு சுவையை தவிர்க்க சமைத்தும் சாப்பிடலாம். சில காய்கறிகள் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் சத்து நிறைந்தவை மற்றும் பால் உற்பத்தியை தூண்டக் கூடியவை ஆகும்.

  • ஓட்ஸ்

சீரான டயட் திட்டத்தில் மிக முக்கியமான பொருளாகும். மேலும், இது சமைப்பதற்கு எளிமையானது. பால் உற்பத்திக்கு உதவுகின்ற பார்லே போலவே இதுவும் பலன் அளிக்கிறது. ஆக, பார்லே அல்லது ஓட்ஸ் என இரண்டில் ஏதேனும் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

  • பூண்டு மற்றும் மசாலாக்கள்:

உணவில் சுவையை அதிகரிப்பதற்கு மட்டும் பிரபலமானது அல்ல பூண்டுகள். உடலுக்கு பல விதமான நன்மைகளையும் இவை அளிக்கின்றன. குறிப்பாக இது தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கிறது.

மசாலாக்கள் நமது உணவின் சுவை மற்றும் மனம் ஆகியவற்றை அதிகரிக்கக் கூடியவை. இவற்றில் உள்ள ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து போன்றவை பலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்கின்றன.

பாலூட்டும் காலங்களில் நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாத உணவுகள்

  • மது

பாலூட்டும் தாய்மார்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பின், அதை அவர்கள் முழுவதுமாக கைவிட வேண்டும் அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், மது அருந்துவதால் பால் உற்பத்தி பாதிக்கும் மற்றும் குறையும்.

  • காஃபி

காபி குடித்தால் தாய்ப்பாலில் சில சமயம் காஃபைன் இருக்கக் கூடும். அதை செரிமானம் செய்யக் கூடிய அளவுக்கு குழந்தையின் மெடபாலிசம் சிறப்பானது கிடையாது. ஆக, குழந்தைக்கு அது எரிச்சலைத் தரும் மற்றும் அவர்கள் தூங்குவதில் சிக்கலை ஏற்படுத்தும்.

இதையும் படிக்கலாமே! - பாலூட்டும் தாய்மார்கள் ஆரோக்கியமான டயட் பிளானை பின்பற்றுவதற்கான அத்தியாவசிய டிப்ஸ் என்ன?

  • பதப்படுத்தப்பட்ட உணவுகள்

இந்த வகை உணவுகளில் மிக அதிகப்படியான சேச்சுரேடட் கொழுப்புகள் இருக்கும். அவை தாய்ப்பால் வழியாக குழந்தைகளை சேரும்போது அவர்களது பிரச்சினையை தரக் கூடும்.

குழந்தைகளுக்கு தேவைப்படும் அத்தியாசியவமான மற்றும் அனைத்து விதமான ஊட்டச்சத்துகள் தாய்ப்பால் மூலமாகவே கிடைக்கின்றன. ஆகவே, தாய்ப்பால் சுரப்பதற்கு உகந்த உணவுகளை தாய்மார்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால், ஆரோக்கியமான தாய்மார்களால் மட்டுமே ஆரோக்கியமான குழந்தையை வளர்த்தெடுக்க முடியும்.

பாலூட்டும் அன்னையர்களால் நம்பப்படும் ஊட்டச்சத்து தீர்வுகள்

உங்கள் குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைக்க, ஊட்டச்சத்து நிறைந்த இயற்கை பொருட்கள் உங்கள் டயட்டை எளிதாக்கி பால் சுரப்பை மேம்படுத்தும்.

MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

MamaGro™ Protein Diskettes - High Protein & No Added Sugar - 250gm (50 Diskettes)

High Protein Pregnancy Biscuits | Supports Healthy Placenta | Supports Fetal Development | Easy To Digest

3776 Moms bought
₹499₹64923% Off
Rating
4.3
(88)
Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2

Anti Colic Slow (S) Flow Grooved Baby Nipple - Pack of 2

BPA Free | Breast-Like Nipple | Food Grade Material | Wide Base for Better Latch | Can be Sterilized | Microwave Safe | Fits Most Standard Bottles

5764 Moms bought
₹59₹7925% Off
Rating
4.8
(118)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.